டீசல் விலை லிட்டருக்கு 1.26 ரூபாயும், பெட்ரோல் விலை 5 காசும் அதிகரித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள்:
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.
டீசல்-பெட்ரோல்:
டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 26 காசு அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.53.93–ல் இருந்து ரூ.55.19 ஆக உயர்ந்தது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசு உயர்ந்தது. இதனால், டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.65.60–ல் இருந்து ரூ.65.65 ஆக அதிகரித்தது. இந்த விலை உயர்வு, நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
கடந்த மே 1–ந் தேதியில் இருந்து கணக்கிட்டால், கடந்த 6 வாரங்களில் 4–வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments