இயற்கை பேரிடர் மற்றும் விபத்துகளில் மனித உயிர்களை மீட்டவர்கள் "ஜீவன் ரக்ஷ பந்த் விருது" பெற விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளது:
இயற்கை பேரிடர்கள் மற்றும் எதிர்பாராத விபத்துகளிலிருந்து மனித உயிர்களை காப்பாற்றியவர்கள் மற்றும் அதற்காக தன் உயிரை இழந்தவர்களுக்காக "ஜீவன் ரக்ஷ பந்த் விருது" வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், 2014 அக்டோபர் முதல் 2 ஆண்டு காலத்திற்குள் தகுதிவாய்ந்த நபர்கள் இருந்தால், மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து ஜூன் 25 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவில் மகளிருக்காக சிறந்த சேவையாற்றியவர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்பட உள்ளது. தகுதிவாய்ந்த நபர்கள், ஜூன் 20 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.
மாநில மகளிர் ஆணைய பதவிகள்:அதேபோல், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பெண்கள் நியமிக்கப்பட உள்ளனர். சமூக சேவகர், கல்லூரி முதல்வர் மற்றும் வழக்குரைஞர் ஆகிய பிரிவுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தலா ஒருவர் நியமிக்கப்பட உள்ளனர். தகுதி வாய்ந்தவர்கள், திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments