கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்த காலகட்டத்தில், பீகார் மாநிலம் தர்பங்காவிலிருந்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது ரயிலின் எஸ்-6 பெட்டி தீப்பிடித்து எரிந்தது.
இதில் அந்தப் பெட்டியில் இருந்த 59 பேர் உடல் கருகி இறந்தனர். இந்நிலையில், குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. முஸ்லீம் மக்களை குறிவைத்து வேட்டையாட தொடங்கினர் சங்பரிவார் அமைப்பினர்.
மிகக் கொடூரமான முறையில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில் சிக்கி 2000 பேர் பலியாகினர். இந்த கலவரத்தில் 254 இந்துக்களும் பலியானார்கள். பிப்ரவரி 28ஆம் தேதி 2000 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ''குல்பர்க் சொசைட்டி'' பகுதியில் வசித்த முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதில் பலர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டதோடு, அடித்தும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் 69 பேர் உயிரிழந்தனர். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார். இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் 60 பேரில் 36 பேர் நிரபராதி என்றும் மீதமுள்ள 24 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 2 ஆம் தேதி தீர்பளிக்கப்பட்டது. இந்த படுகொலை குற்றவாளிகளில் 24 பேருக்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், 12 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் சாகும் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டு வந்த நிலையில், 11 பேரை தவிர வேறு யாருக்கும் மரண தண்டனை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments