Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 9, 2016

தேவைப்பட்டால் மந்திரி பதவியை ராஜினாம செய்யத்தயார் - பொன் ராதா


கன்னியாகுமரி மாவட்டத்தில் குள்ளச்சல் துறைமுகத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கும் தயாராக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது "குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட வேண்டும் என்பது கன்னியாகுமரி மக்களின் 60 ஆண்டுகால கனவாக இருக்கிறது. குள்ளச்சலில் துறைமுகம் கொண்டு வரப்பட்டால் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயரும். இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூபாய் 23ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தை அமுல்படுத்த மோடி முனைப்பு காட்டி வருகிறார்.

ஆனால் இங்கே திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதற்கு முட்டுக்கட்டையாய் இருந்து வருகிறார்கள். மக்களை தூண்டிவிட்டு துறைமுகம் திட்டத்திற்கு எதிராக போராட வைத்து அத்திட்டத்தை முடக்கப்பார்கிறார்கள். தேவைப்பட்டால் மத்திய அரசின் ஆசியோடு மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களுக்காக வீதியில் இறங்கி போராடத்தயார். மக்கள் துரோகிகளை இணம் கண்டு அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். தமிழக அரசு குளச்சல் துறைமுகத்திற்கு ஆதரவு அளித்திருப்பதை வரவேற்கிறேன்" என்று கூறினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வருகின்ற 14ஆம் தேதி டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் உதவியை கேட்டுப்பெருவார் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். மோடி பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு செயல் திட்டங்களை இந்தியாவில் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால் இதை காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். குறை சொல்வதை விட்டுவிட்டு தங்களது கட்சியை பாதுகாக்க முனைப்பு காட்ட வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. இளங்கோவன் காலத்திலேயே முற்றிலுமாக அழிந்துவிடும்போல் தெரிகிறது என்று கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic