ஜகன்னாத் திருக்கோயில் புனேயில் உள்ள பூரி ஜகன்னாதர் ஆலையத்தைப்போலவே கட்டிட அமைப்பு கொண்டது. இந்த கோயிலில் கடந்த வாரம் ஜெய்ஷ்த பூர்ணிமா திருவிழா நடைபெற்றது. வழிபாட்டின் போது சாமி சிலைக்கு தக்கத்தினால் ஆன கலசங்களை கொண்டு நீராட்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்க சிம்மாசனத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைக்கு முன்பு ஏராளமான பழங்கள் படையலாக வைக்கப்பட்டது.
தற்போது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டது குறித்து கோயில் நிர்வாகிகளிடத்தில் கேட்டபோது, "கடந்த வாரம் நடைபெற்ற பூர்ணிமா விழாவின் போது அதிக மாம்பழங்களை உட்கொண்டதால் சாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது. அதனால் பதினைந்து நாட்களாக சாமி ஓய்வு எடுத்து வருகிறார். இதனாலேயே எந்த பக்தர்களும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாமல் கோயில் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.
சாமி மனித உருவில் இருக்கும் ஒரே கோயில் ஜகன்னாத் திருக்கோயில் மட்டுமே. அங்கிருக்கும் சாமிக்கும் மனிதர்களைப்போலவே வழக்கங்கள் உண்டு என நிர்வாக தலைவர் பூபேந்திர சிங் தெரிவித்தார். பதினைந்து நாட்கள் ஓய்வின் போது சாமிக்கு இயற்கையான உணவுப்பொருட்கள் மட்டுமே கொடுக்கப்படும். ஓய்விற்கு பின் மக்களுக்கு அருள் பாலிக்க தேரில் உலா நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
No comments:
Write comments