தேர்தல் முடிவிற்கு பின்னர் இக்கூட்டணி சிதைந்துவிடும் என்று அரசல் புரசலாக செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில், வரும் உள்ளாட்சி தேர்தல்களி இவ்விரு கட்சிகளும் தனியாக போட்டியிடப்போகிறது என்று அறிவித்துவிட்ட நிலையில், தேமுதிக மற்றும் தமாக மக்கள் நலக்கூட்டணியிலிருந்து வெளியாகியது ஊர்ர்ஜிதமாகிவிட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய மநகூ வைகோ கூறும்போது, எங்கள் கூட்டணியிலிருந்து விஜயகாந்தும், ஜி.கே வாசனும் வெளியேறிவிட்டாலும் எங்களது நட்பு வலுவாகவே இருக்கிறது. அவர்களோடு தொடர்ந்து நட்புறவில் ஈடுபட்டு வருவோம். மேலும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வது தொடர்பானா ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறோம். விரைவில் இது தொடர்பான இறுதி முடிவை வெளியிடுவோம் என்று தெரிவித்தார்.
No comments:
Write comments