தமிழகத்தில் மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வழிமுறையை மாற்றுவதற்கான சட்டதிருத்த மசோதா தமிழ சட்டசபையில் நிறைவேறியது.
மாநகராட்சி மேயர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி இனி தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களே மேயரை தேர்ந்தெடுப்பார்கள். இம்மாற்றம் வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு 132 பேர் ஆதரவும், 88 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனையெடுத்து மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
வேறு கட்சி மேயர்களுக்கு மாமன்ற உறுப்பினர்கள் சரிவர ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பதால் பல மாநகரப்பணிகள் தடைப்படுவதாகவும், மேயர் பதவிக்கென்று தனி தேர்தல் முறையை தவிர்ப்பதற்காகவும் இந்த வழிமுறை கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். இம்மசோதாவிற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments