5 நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ள நரேந்திர மோடி தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ஆர்லிங்டனில் உள்ள தேசிய நினைவிடத்தில் அடையாளம் தெரியான விண்வெளி வீரர்கள் மற்றும் அமெரிக்க-இந்தியா வீராங்கனை கல்பனா சாவ்லாவிற்கும் அஞ்சலி செலுத்தினா. இந்த பயணத்தில் கல்பனாவின் குடும்பத்தார்களையும் சந்தித்த மோடி அவர்களோடு சிறிது நேரம் உரையாடினார். மேலும் ஏராளமான நிகழ்சிகளில் கலந்து கொள்கிறார்.
வாஷிங்டனில் இறங்கியதும் விமான நிலையத்தில் ஏராளமான இந்திய வம்சாவழியினர் தேசியக்கொடியை அசைத்து மோடிக்கு வரவேற்பழித்தனர். விமானத்திலிருந்து இறங்கியதும் அவர்களோடு ஒரு சில மணித்துளிகள் உரையாடினார். இன்று மதியம் அதிபர் ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கெடுத்து பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளார். அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பு 2 மணி நேரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க துணை ஜனாதிபதியும் கலந்து கொள்கிறார். அமெரிக்க பாரளுமன்றத்தின் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றவிருக்கிறார். அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் 5வது இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments