சமீபத்தில் பெங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் எல்லா பயணிகளின் உடமைகளை சோதனை செய்வது போல் அங்கு வந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் உடமைகளையும் சோதனை செய்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த மூத்த அதிகாரிகள் வந்து உடனே வருத்தம் தெரிவித்ததும் கூடியிருந்த பிற பயணிகள் கலைந்து சென்றனர்.
இதனை கண்ட அவரது ரசிகர்கள் சிலர் இச்செயலை கண்டித்தனர். தமிழகத்திலும் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ இளையராஜாவை சோதனை செய்த விவகாரத்தை வன்மையாக கண்டித்தார். இதனால் இப்பிரச்சனை பூதகரமானது. இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இளையராஜா கூறும்போது "என்னை விமான நிலைய காவலாளி சோதனை செய்தது ஒரு சாதாரண நிகழ்வுதான். அவர் எல்லா பயணிகளையும் சோதனை செய்தது போல என்னையும் சோதனை செய்தார். இதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. நானும் ஒரு சராசரி மனிதன் தான். இதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும் என தெரியவில்லை? அவர் அவரது கடமையை செய்தார். அவருடைய கடமையை செய்வதற்கு நான் எந்தவிதமான தடையும் கொடுக்கவில்லை. ஒவ்வொருவரும் தனது கடமையை நிறைவேற்றினால் மட்டுமே இந்தியா இந்தியாவாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற விமான நிலையங்களில் பணி புரிபவர்கள் வெவ்வேறு மாநிலத்திலிருந்தும் பணி அமர்த்தப்பட்டிருப்பார்கள். வருபவர்கள் போகுபவர்கள் யார் யார் என்றெல்லாம் அவர்களுக்கு தெரியாது.
இதை விட கடினமான சோதனைகளுக்கெல்லாம் ஆளாகியிருக்கிறேன். எனவே யாரும் இதனை பெரிதுபடுத்த வேண்டாம். நானும் ஒரு சாதாரணமானவன் தான். சோதனை செய்யப்பட்டதில் எனக்கு எந்தவித மனக்கசப்பும் இல்லை. மக்கள் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு நேரத்தை வீணடிக்கிறார்கள் என இளையராஜா கூறியுள்ளார்.

No comments:
Write comments