Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 8, 2016

செரீனா வில்லியம்ஸ்தான் அதிக துட்டு பார்த்த விளையாட்டு வீராங்கனை



அமெரிக்கா: உலகில் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த பிரஞ்ச் ஓபன் இறுதிப்போட்டியில் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தாலும் அதிகம் சம்பாதித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூபாய் 190 கோடி சம்பாதித்து முதலிடத்தில் உள்ளார் என பிரபல பத்திரிகை போர்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது. செரீனாவிற்கு தற்போது 34 வயதாகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். தொடர்ந்து 19 கிராண்ட்ஸலாம் போட்டிகளின் வென்றுள்ளார் அவர். ஜெர்மனியின் ஸ்டெபி கிராப் 22 கிராண்ட்ஸலாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அவர்து சாதனையை செரீனா முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  பிரஞ்ச் ஓபனில் பட்டத்தை தவறவிட்டதால் ஸ்டெபியின் சாதனையை அவரால் சமன் செய்ய முடியவில்லை. இதுவரை செரீனா வில்லியம்ஸ் தான் விளையாடிய போட்டிகளில் மூலம் ரூபாய் 475 கோடி சம்பாதித்துள்லார். மற்ற அனைத்து வீராங்கனைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இவரின் வருமானம் இரட்டிப்பு என்று சொல்லப்படுகிறது.

செரீனா டென்னிஸ் விளையாட்டில் பிரபலமானது போலவே பல சர்ச்சைகளிலும் சிக்கி பிரபலம் அடைந்துள்லார். பிரபல பத்திரிகைகளுக்கு விளம்பரத்திற்காக நிர்வாண போஸ் கொடுப்பது என இவர் மீது பல சர்சைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic