ராபர்ட் வதோதரா மீது சுமத்தப்பட்டிருக்கு குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவிக்க சோனியா எல்லாவிதமான முயற்சிகளிலும் இறங்கி வருகிறார். இதன் மூலம் தனக்கு கட்சியை விட குடும்பமே முக்கியம் என்பதை கட்சியின் தொண்டர்களுக்கு தெளிவாக்கியுள்ளார். 2014 பாராளுமன்ற தேர்தலிலிருந்து காங்கிரஸ் கட்சி தனது பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது அதே சமயத்தில் பா.ஜ.க இந்தியா முழுவதும் சக்தி பெற்று காலூன்றி வருகிறது. சோனியாவின் குடும்பமே காங்கிரஸ் கட்சியை கட்டுப்படுத்தி வருகிறது. அதனால் தான் சோனியாவின் குடும்பத்தை பற்றி எவரேனும் விமர்சித்தால் கட்சியின் நிர்வாவிகள் அதற்கு பதில் கொடுத்து வருகிறார்கள்.
பிரதமர் மோடியை ஷாஹின்ஸா என்று விமர்சித்த சோனியாவிற்கு பதில் கொடுக்கும் விதத்தில் "தி ஆர்கனைஜர்" தெரிவித்துள்ளதாவது, மோடியை விமர்சிப்பதினாலே அவரை ஷாஹின்சா என்று அழைப்பதினால் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியை சரி செய்துவிடமுடியாது. ஊழல், குடும்ப அரசியல், லஞ்சம் என அனைத்திலும் காங்கிரஸ் கட்சி ஊறிப்போய்விட்டது. இன்றைய இளைஞர்கள் விழித்துக்கொண்டுவிட்டார்கள். அவர்களுக்கு தேசத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமுமே முக்கியமாக கருதுகிறார்கள். எனது இதனை மனதில் வைத்து காங்கிரஸ் கட்சி ஒரு சிறந்த எதிர்கட்சியாக செயல்படவேண்டும் அதுவே ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என்று அப்பதிரிகை தெரிவித்துள்ளது.

No comments:
Write comments