Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 7, 2016

டெல்லியை தாக்க திட்டமிடும் தாவுத் இபுராகிம் - பகீர் தகவல்


பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு தாவுத் இபுராகிமை நிர்பந்தித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவால் தேடப்பட்டுவரும் நிழல் உலக தாதா பிரபல பயங்கரவாதியான தாவுத் இபுராகிம் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளான். 1993ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தாவுத் இபுராகிமை இந்தியாவசம் ஒப்படைக்க பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில் நாட்டின் தலைநகரமான டெல்லியை தாக்குவதற்கு தாவுது இபுராகிம் திட்டம் தீட்டி வருவதாக சிறப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர். புதுடெல்லி இரயில்வே நிலையம், மேட்ரோ நிலையம், விமானநிலையம், சட்டமன்றம் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நிகழ்த்தப்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இத்தகவலை டெல்லியின் வடமேற்கு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் புலனாய்வு அதிகாரிகளிடத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் வர்த்தக மாநகரமான மும்பையிலேயே தனது செல்வாக்கை பயன்படுத்தி வந்த தாவுத் இபுராகிம் தற்போது தலைநகரை குறிவைத்திருப்பதை பார்க்கும்போது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தாவுத் இபுராகிமை பாதுகாப்பதற்காகவும் இந்தியாவிடம் பிடிப்பட்டு விடாமல் தப்பவைப்பதற்கும் அவரை கராச்சியிலிருந்து பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச்சென்றிருக்கலாம் என புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் தாவுத் இபுராகிமோடு தொலைபேசியில் தொடர்பு வைத்திருந்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட பதவி விலகிய பா.ஜ.கவின் மராட்டிய மாநில மந்திரி ஏக்னாத் கட்சேவிடமும் இது தொடர்பாக தீவிர விசாரணைகளை புலனாய்வு அதிகாரிகள் நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic