Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 7, 2016

என்ன... 'கபாலி'க்கு இசை வெளியீட்டு விழா கிடையாதா...???


ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காது என்றும், நேரடியாக கடைகளில் சிடிக்கள் விற்பனையாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'மெட்ராஸ்' படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கிஷோர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் இசை வெளியீட்டில் 'கபாலி' திரைப்படமும் ஒன்று. ஆனால் தற்போது ரஜினிகாந்த் அமெரிக்காவில் விடுமுறையை கழித்து வருவதால், இசை வெளியீடு நடக்கும்போது அவர் இந்தியாவில் இருக்க மாட்டார். எனவே விழாவாக நடத்தாமல் நேரடியாக இசையை வெளியிட்டுவிடலாம் என படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

ஜூலை 1-ஆம் தேதி கபாலி திரைப்படத்தின் வெளியீட்டு விழா திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதுவும் தற்போது தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic