நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது குறிபிடத்தக்கது. இங்குள்ள சுமத்ரா தீவின் துறைமுக நகரமான படாங்கில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் சுமார் 30 வினாடிகள் குலுங்கின. பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருவில் கூடினர். எனினும், நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சுமத்ரா தீவுக்கு தெற்கே 155 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 50 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக சுனாமி உருவாகலாம் என மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஆனால், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments