Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 2, 2016

சொத்து குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி


முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தனது தரப்பு வாதங்களை கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா உச்சநீதிமன்றத்தில் இன்று நிறைவு செய்தார்.


அவர் முன்வைத்த வாதங்கள் என்ன மற்றும் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் என்ன?

ஜெயலலிதா அளவுக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக ஆச்சாரியா உச்சநீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது இந்த வழக்கில் குற்றச்சாட்டு அல்ல என்றும், தவறான வழியில் சொத்து குவிக்கப்பட்டதா என்பதுதான் என்றும் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க உங்களிடம் ஆதாரங்கள் உள்ளதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ஆச்சாரியா, சசிகலாவிடம் இருந்தே பணத்தை பெற்றுக்கொண்டு அதை ஜெயலலிதா கடனாக கணக்கு காட்டி சொத்துக்களை குவித்ததாகக் குற்றம் சாட்டினார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒருவருக்கொருவர் பணபரிமாற்றம் செய்து கொள்ளகூடாது என எந்த சட்டமும் கூறவில்லை என்றும், தந்தையிடம் இருந்து மகன் பணம் பெற்று சொத்துகளை வாங்கினால் அது தவறா? என்றும் கேள்வி எழுப்பினர். அதோடு, அவ்வாறு பெறப்பட்ட பணம் தவறான வழியில் வந்ததுதான் என எவ்வாறு முடிவெடுக்க முடியும் எனவும் கேட்டனர்.

வருமான வரிக்கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என்றும், சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடுத்த பிறகே, அதனை அவர் தாக்கல் செய்தார் என்றும் ஆச்சாரியா தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், வருமான வரி துறை தீர்பாயம் இதில் முடிவெடுத்துவிட்டதாகவும், சொத்துக்களுக்கான கணக்குகளும் சரிபார்க்கப்பட்டுவிட்டதாகவும், இது குறித்து பேச ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், வருமான வரி தொடர்பாக உங்களிடம் ஏதேனும் ஆவணங்கள் இருக்கிறதா என்றும் கேட்டனர். அதற்கு இல்லை என ஆச்சாரியா பதில் அளித்தார். ஆவணங்கள் இல்லாமல் எவ்வாறு குற்றஞ்சாட்டுகிறீர்கள்? என நீதிபதிகள் கேட்டதற்கு, ஒன்றிரண்டு ஆவணங்கள் உள்ளதாகவும், அவை வருமான வரி துறை அதிகாரிகளால் உருவாக்கப்பட்டவை என்றும் கூறினார்.

அதற்கு, ஆவணங்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்தான் தயாரிப்பார்கள் என கூறிய நீதிபதிகள், குற்றச்சாட்ட நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் உள்ளனவா என கேள்வி எழுப்பினர். வாதத்தின் முடிவில், தனது 49 ஆண்டுகால வழக்கறிஞர் தொழிலில் இந்த வழக்கிற்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய நாட்கள் மறக்கமுடியாதவை என ஆச்சார்யா கூறினார். அதனை ஏற்கும் வகையில் பேசிய நீதிபதிகள், உங்கள் அனுபவம் தான் எங்கள் வயது என்றும், உங்களின் வாதத்தைக் கேட்டதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தனர்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic