ஸ்மார்ட் போனின் வருக்கைக்கு பின்னர் செல்பி எடுக்கும் மோகம் சிறுசுகள் முதற்கொண்டு பெருசுகள் வரை தலைவிரித்தாடுகிறது. காலையில் எழுந்து சுய தேவைகளை தொடங்குவது முதல் இரவு படுக்கும் வரை ஒவ்வொரு அசைவுகளையும் செல்பி எடுக்கும் மோகத்தில் இன்று மக்கள் சிக்கிவுள்ளனர். அதைவிட மிகவும் அபாயகரமான இடங்களிலும் செல்பி எடுக்கும் மோகமும் இளசுகளிடையே காணப்பட்டுவருகிறது.
இத்தகைய மோகத்தால் சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் தந்தையின் துப்பாக்கியை நெற்றி பொட்டில் வைத்து செல்பி எடுக்கும் மோகத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டது, மலை உச்சியில் நின்று கொண்டு செல்பி எடுக்கிறேன் என தவறி விழுந்து உயிரை பறிகொடுத்த சம்பவங்கள் என நிறையவே நடந்து வருகிறது. ஸ்மார்ட் போன்கள் மூலம் செல்பி எடுப்பதினால் அதிகபட்ச ஒளி மற்றும் கதிர்வீச்சால் விரைவிலேயே முகச்சுருக்கம், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், வயதான தோற்றம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செல்பி எடுக்கும்போது எந்தக்கையால் நீங்கள் போனை பிடித்துக்கொண்டு படம் எடுக்கின்றீர்கள் என்பதை உங்கள் முகத்தை பார்த்தே மருத்துவர்களால கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர். முகத்தில் எந்த பக்கம் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை பார்த்தும் கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இது குறித்து இங்கிலாந்து நாட்டின் லினியா ஸ்கின் கிளினிக் மருத்துவர் சைமன் ஜோவாகி கூறும்போது, "அதிகமாக செல்பி எடுப்பவர்களும், பிளாக்கில் உள்ளவர்களும் கவலைப்படவேண்டும், ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் புளூடூத் கதிர்வீச்சுக்கூட உடலை பாதிக்கும் தன்மை கொண்டது. போனில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு, தோலில் உள்ள மரபணுக்களை அழித்துவிடும் தன்மை கொண்டது. அதனால் விரைவில் தோல் வயதானவர்களுக்கு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். மேலும் சுருக்கங்களை அதிகரித்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
செல்பி பிரியர்களே கொஞ்சம் அடக்கி வாசிங்க...
No comments:
Write comments