திமுகவில் இணைந்துவிட்டதாக முன்னால் அதிமுக எம்.எல்.ஏ பழக்கருப்பையா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அதிமுகவின் பழக்கருப்பையா துறைமுகம் தொகுதிய் எம்.எல்.ஏவாக செயல்பட்டுவந்தார். கடந்த ஆட்சி முடிவதற்கு சில மாதங்களுக்கு முன் பழக்கருப்பையா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் திமுகவில் இணைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
சென்னை அறிவாலையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த அவர் கூறும்போது " நான் மனதளவில் திமுகவில் இணைந்துவிட்டேன். ஸ்டாலின் தலைவர் கலைஞரை சந்திப்பதற்காக ஏற்பாடு செய்தார். அது ஏனோ தள்ளிப்போய்கொண்டே இருந்தது. தற்பொழுது கலைஞரே என்னை கட்சியில் சேர வேண்டும் என அழைப்புவிடுத்திருந்தார். இதை விட என்ன பெருமை எனக்கு கிடைத்துவிடப்போகிறது. ஸ்டாலின் 4வது திராவிட தலைமுறை தலைவராக செயல்பட்டுவருகிறார். உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டசபையில் இருக்கை வசதி செய்துகொடுக்காதது ஏன் என தெரியவில்லை. சட்டசபையில் கலைஞரின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு" என்று கூறினார். நீங்கள் திமுகவில் இணைந்துவிட்டீர்கள் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியிடலாமா என நிருபர்கள் கேட்டதற்கு தான் திமுகவில் இணைந்துவிட்டேன் என்பதை தாராளமாக போட்டுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
No comments:
Write comments