Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 10, 2016

ஆய்வில் அதிர்ச்சித் தகவல் : ஆசியாவிலேயே இந்தியாவில்தான் குறைந்த அடிப்படை ஆண்டுச் சம்பளம் வழங்கப்படுகிறது



வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் என்ற புள்ளிவிபர ஆய்வின்படி, ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே குறைந்த அடிப்படை ஆண்டுச் சம்பளம் வழங்கப்பட்டு வருவது இந்தியாவில்தான் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, அலுவலகங்கள் சார்ந்த வேலைகளான ஒயிட் காலர் வேலைகளுக்கு சீனாவை விட இரண்டு மடங்கு குறைவாகவே அடிப்படை ஆண்டுச் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், உயர்மட்ட அளவிலான வேலைகளுக்கு ஆஸ்திரேலியாவிலும், நடுத்தர அளவிலான வேலைகளுக்கு சிங்கப்பூரிலும் அதிக அளவு அடிப்படை ஆண்டு சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சீனாவில் அதிகமாக சம்பளம் வழங்கப்படுவதற்கு காரணம் அங்கு மக்கள்தொகையில் முதியோர்கள் அதிகமாக இருப்பதும், வேலை செய்வதற்கு ஏற்ற மனித வளம் அங்கு குறைவாக இருப்பதுமே ஆகும். 

ஒட்டுமொத்தமாக அனைத்து வேலைகளுக்கும் ஒப்பிடும் போது இந்தியாவைவிட 64 சதவீதம் வரை அதிகமாக சீனாவில் அடிப்படை ஆண்டு சம்பளம் வழங்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

நீங்க என்ன சொல்றீங்க...?

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic