மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வு வயதை, 65 ஆண்டுகளாக உயர்த்த, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று இத்தகவலை வெளியிட்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘மருத்துவர்கள் பற்றாக்குறையை கருத்தில்கொண்டு, மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 62-ல் இருந்து, 65-ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, இதன் மூலம், மருத்துவ சேவைகள், கல்வி மற்றும் தேசிய சுகாதார திட்டங்கள் மேம்படும்’ என்றார். கடந்த மாதம் உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரன்பூரில் மத்திய அரசின் சாதனை விளக்கக் கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிவித்தார். பிரதமரின் ஒப்புதலுடன், கடந்த மே 31-ம் தேதியே இம்முடிவு அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments