Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 8, 2016

டாஸ்மாக் கடை நேரத்தை குறைத்தும் எந்த பயனும் இல்லை



தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைத்தும் எந்த பலனும் இல்லை, வழக்கம் போலவே மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமலுக்கு கொண்டு வரும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி ஆட்சி அமைத்த முதல் நாள் அன்று முதற்கட்ட நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளின் நேரத்தை 10 மணி நேரமாக குறைத்தார். இதன் மூலம் டாஸ்மாக் கடைகள் இனி நண்பகல் 12 மணிக்கே திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளில் வியாபாரங்களை ஆய்வு செய்தபின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது. நேரத்தை குறைத்ததால் நாள் வருமாணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் சொல்லப்போனால் ஒரு சில இடங்களில் 10% முதல் 15% வரை வியாபாரம் பெருகியுள்ளதாகவும் தெரிவிக்கிறது. டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் பணியாளரிடம் கேட்டதற்கு "இதற்கு முன்பு நடந்தது பொலவே இப்பொழுதும் மது விற்பனை நடந்து வருகிறது. நேரத்தை குறைத்தாலும் இங்கே மது விற்பனையில் எந்த சரிவும் இல்லை" என்று தெரிவித்தார்.

மற்றொரு டாஸ்மாக் ஊழியர் கூறும்போது "கடைகள் என்னவோ பகல் 12 மணிக்குத்தான் திறக்கப்படுகிறது, ஆனால் பார்கள் அனைத்தும் காலை 10 மணிக்கே திறக்கப்படுவதால் அங்கு கள்ளத்தனமாக மது விற்கப்படுகிறது. அது தவிற இரவே சிலர் மொத்தமாக வாங்கி சென்றுவிட்டு மறுநாள் காலையில் அதிக விலைக்கு விற்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

டாஸ்மாக் கடையின் நேரத்தை குறைத்து எந்த பயனும் இல்லை என்பதையே காட்டுகிறது. படிப்படியாக மதுவிலக்கை அமுல்படுத்தும் முதல் நடவடிக்கையே தோல்வியில் முடிந்துள்ளது என்பதே எதார்த்தம். இந்நிலையில் ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்ததுபோல 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படவேண்டும். இதற்காக பரிந்துரைக்கப்பட்ட 1000 கடைகளிலிருந்து 500ஐ தேந்தெடுக்கும் பணியும் நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic