Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 8, 2016

இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க இதுவே சரியான தருணம் - சாத்வி பிராச்சி


இந்தியாவை இஸ்லாமியர்கள் இல்லாத நாடாக உருவாக்குவோம், அதற்கு இதுவே சரியான தருணம் என பா.ஜ.கவின் பெண் எம்.பி சாத்வி பிராச்சி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க 2014ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததிலிருந்தே சர்ச்சைக்குரிய பேச்சுக்கள பேசி வருகிறார் சாத்வி பிராச்சி என்ற பெண் சாமியார். அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவோம், ஷாருக்கானை பாகிஸ்தானிற்கு அனுப்ப வேண்டும் என பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவந்தவர். தற்போது இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும், அதற்கு இதுவே சரியான தருணம். இதற்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்துத்துவ கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆமிர்கானின் டங்கள் திரைப்படத்தை இந்துஸ்தானியர்கள் தோல்வியடையச்செய்ய வேண்டும், மேலும் நடிகர்கள் ஷாருக்கான், ஆமிர்கான் ஆகியோர் பாகிஸ்தானிற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என அவ்வீடியோவில் பேசியுள்ளார். இதனால் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார் சாத்வி. இவரது இந்த மத துவேச பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது. சாத்வி மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிவருகிறார் என அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic