இது தொடர்பாக சினிமா நட்சத்திர நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது "பேரறிவாளன், சாந்தன், முருகேசன், நளினி உட்பட 7 பேர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறைத்தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக இவர்களது வாழ்வு சிறையிலேயே கழிந்து கொண்டிருக்கிறது. பேரறிவாளனின் தாய் தன்னுடைய மகன் நிரபராதி என்றும் அவனோடு சேர்ந்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென நெடுங்காலமாக போராடி வருகிறார். பேரறிவாளனும் தான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை, தான் நிரபராதி என்று இதுவரை கூறிவருகிறார். அவரை விசாரித்த காவல்துறை அதிகாரியும் பேரறிவாளன் நிரபராதி என்று கூறியுள்ளார், பிறகு ஏன் அவரை விடுவிப்பதில் இந்த தாமதம்?, அவரை விடுதலை செய்வதற்காக வேலூரிலிருந்து சென்னை வரை நடைபெறவுள்ள பேரணியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்" என்று கூறினார்.
விஜய் சேதுபதியின் இந்த பேட்டிக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது "ராஜிவ் கொலை வழக்கில் சிறைதண்டனை பெற்று வரும் எனது தம்பிகள் மற்றும் அக்கா நளினியின் விடுதலைக்காக தம்பி விஜய் சேதுபதி குரல் கொடுத்திருப்பது மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது. எனது பாராட்டுக்களை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து போராடி அவர்கள் ஏழுவரையும் மீட்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments