இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்படங்களுக்கு தணிக்கை குழுவில் சான்றிதழ் பெறுவது தற்போது பெரும் சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
தணிக்கை குழுவில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தணிக்கை குழுவுக்கு பதிலாக ‘ரேட்டிங்’ முறையை கொண்டு வரலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.
எந்த திரைப்படத்தைப் பார்க்கலாம், எதை பார்க்க கூடாது என்பதை மக்கள் முடிவுக்கு விட்டு விடவேண்டும் என்ற அவர், திரைப்படத்தை ஒருவர் பார்த்து விட்டு நல்ல படம் இல்லை என்று கூறினால், அந்த திரைப்படத்தை பார்க்க யாரும் போக மாட்டார்கள் என்றும் நடிகை நந்திதாதாஸ் கூறினார்.
இயக்குனர் பார்த்திபனனுடன் ’அழகி’ படத்தில் நந்திதா தாஸ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments