நாடு முழுவதும் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்காக சம்ஸ்கிருத பள்ளிகளை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் பணி மாற்றம் செய்யப்படும்போது அவர்களின் குழந்தைகளை தான் செல்லுகின்ற ஊர்களில் இருக்கும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சேர்பதில் சிக்கல் நிலவி வருவதால் அப்பள்ளிகளுக்கு நிகராக தரமான ரீதியில் நாடு முழுவதும் சமஸ்கிருத பள்ளிகளை துவக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது. இதற்கான அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து அமைச்சர்களின் கருத்துக்களை கேட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத சம்ஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது பாரதிய ஜனதாவின் இந்துத்துவா கொள்கையை திணிக்கும் செயல் என கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எதிர்புகள் ஒரு புறம் இந்தாலும் முதற்கட்டமாக பெருநகரங்களில் இத்தகைய பள்ளிகளை துவக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. சமஸ்கிருத பள்ளிகளில் 60% இடங்கள் நாடு முழுவதும் பணி இடமாறும் அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும். இதில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு தலா 30% இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க அரசு ஹிந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில் சமஸ்கிருத பள்ளிகளை திறப்பதும் அம்மொழியை திணிப்பதற்காகவே என கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

No comments:
Write comments