சமீபத்தில் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் ஜெயின் மதகுரு நிர்வாண சாமியாரான ஆச்சார்யா வித்யாசாகரை சந்தித்து ஆசி பெற்றார். அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டை பரிமாறப்படுவதை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். கவலைப்படாதீர்கள் சாமி! முடிந்தால் முட்டைக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதுமொழி கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் சபாநாயகர்.
ஏற்கனவே மத்தியபிரதேச மாநிலத்தில் அங்கன்வாடிகள் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மத்திய உணவில் முட்டை வழங்கப்படாது என அந்த அரசு தெரிவித்துள்ளது. அம்மாநில முதலைமைச்சர் சிவராஜ் சிங் செளகான் கூறும்போது "தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் மதிய உணவில் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படாது. ஜெயின் மதத்தவர்களின் உணர்வுகளை அறிந்து கொண்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது" என்று தெரிவித்திருந்தார். அதே சமயம் புள்ளி விபரப்படி புரத சத்துக்கள் குறைபாடுகளால் மத்திய பிரதேசத்தில் அதிக குழந்தைகள் பாதிக்படுவதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் அந்த அறிக்கை தொடர்பாக நாங்கள் கவலைப்படப்போவதில்லை என மத்திய அரசை ஆளும் பா.ஜ.க திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் சபாநாயகரும் ஜெயின் சாமியாரிடம் வாக்குறுதி அளித்துவிட்டு வந்திருப்பதை பார்க்கும்போது நாடு முழுவதும் பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டை வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்றே தெரிகிறது.
No comments:
Write comments