தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஜாகிர் நாயக்கின் தலையை சவுதி அரேபியா சென்று வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 50 லட்சம் பரிசு தருவதாக வி.ஹெச்.பி பெண் சாமியார் சாத்வி பிராச்சி பேசிய வீடியோ மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைகளுக்கும், வன்முறைபேச்சுக்களுக்கும் சொந்தக்காரராகிப்போன வி.ஹெச்.பியின் பெண் சாமியார் சாத்வி பிராச்சியின் மற்றொரு வீடியோ பிரபல ஆங்கில சேனலில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதி தனது முகநூல் பக்கத்தில் தான் இந்தியாவின் மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களால் கவரப்பட்டவன் என்று வெளியிட்டிருந்ததாக வங்கதேசம் தெரிவித்தது.
இதனை அடுத்து ஜாகிர் நாயக் தொடர்பான விவகாரம் இந்தியாவில் சூடுபிடிக்கத்துவங்கி முன்னனி டி.வி சேனல்களில் பெரும் விவாதமாகிப்போனது. இந்நிலையில் அவருக்கு ஆதரவாக போராட்டங்கள் அதிகளவில் எழுந்து வருகிறது. தன் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டிற்கு ஜாக்கிர் நாயக் பகிரங்கமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக தான் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
தற்போது வி.ஹெச்.பியின் பெண் சாமியார் ஜாகிர் நாயக்கின் தலையை வெட்டுபவர்களுக்கு 50 லட்சம் பரிசு தருவதாக வெளியான வீடியோ எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல மேலும் இப்பிரச்சனையை பூதகரமாக ஆக்கியுள்ளது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments