Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 15, 2016

பிரதமர் மோடியின் பிறந்த நாளை சாதனை நாளாக மாற்ற திட்டம்...!


பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை 66வது பிறந்தநாளை குஜராத்தில் கொண்டாட திட்டமிட்டுள்ளார். அன்று, மாற்றுத்திறனாளிகள் 11 ஆயிரம் பேருக்கு உதவி வழங்கி, கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குஜராத்தின் நவ்சாரி என்ற இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடி அளவுக்கு மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. அங்கு ஆயிரம் பார்வையற்றவர்கள் விளக்குகளை ஏற்றி வைத்து சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 346 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே நேரத்தில் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது சாதனை இருந்து வருகிறது. ஆனால், ஒரே நேரத்தில் ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் ஒரே நேரத்தி்ல 500 பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது. இதனை முறியடித்து ஆயிரம் பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட உள்ளது. மேலும் 11 ஆயிரம் பேருக்கு உதவிகள் வழங்கி சாதனை படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வாரணாசியில், 10,200 பேருக்கு உதவி வழங்கி, அது குறித்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோவில் கின்னஸ் அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியதால், சாதனையாக ஏற்கப்படவில்லை. எனவே தற்போது அதுபோன்று குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக , மாவட்ட கலெக்டருடன் இணைந்து மத்திய மாற்றுத்திறனாளிகள் அதிகாரி செயல்பட்டு வருகிறார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic