Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 27, 2016

வங்கதேசத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


வங்கதேச தலைநகர டாக்காவில் கடந்த மாதம் 2ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி இன்று காலை சுட்டுக்கொல்லபப்ட்டுவிட்டதாக வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேச தலைநகர டாக்காவில் கடந்த ஜூலை மாதம் 2ஆம் தேதி பேக்கரியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 18 வெளிநாட்டினர் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. எனினும் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டாலும் இதற்கு மூளையாக இருந்து செயல்பட்ட பயங்கரவாதியை தேடும் பணியில் வங்கதேச காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இன்று காலை பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் மேலும் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அதில் ஒருவன் தமீம் செள்த்ரி. ஜமாத்துல் முஜாகிதீன் பங்களாதேஷ் பயங்கரவாத அமைப்பின் தலைவனாகவும் செயல்பட்டவன். அதே போன்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் வங்கதேச கிளைக்கான தலைவனாகவும் செயல்பட்டிருக்கிறான். கனடா-வங்கதேச பிரஜை யான இவன் கனடாவின் டொரன்டோ நகரில் வசித்து வந்திருக்கின்றான். இருந்த போதிலும் ஐ.எஸ் அமைப்புடனான இவனது தொடர்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic