மகாத்மா காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து வருகிறது. அதே சமயம் மகாத்மா காந்தியின் கொள்கைகளை பகிரங்கமாக ஆர்.எஸ்.எஸ் எதிர்த்து வந்தது உலகறிந்த விஷயம் என காங்கிரஸ் தலைவர் ரிஜ்வான் அர்ஷத் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் தொடர்பு உண்டு என ராகுல் காந்தி பேசினார். இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து தான் அப்படி சொல்லவே இல்லை என ராகுல் காந்தி அந்தர் பல்டி அடித்தார். அன்று முதல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ராகுல் காந்தியை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஜ்வான் அர்ஷத் டெல்லியில் செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது,
"காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளை எதிர்த்து போராடவிருக்கிறோம். மகாத்மா காந்தி கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஆர்.எஸ்.எஸ் கூறிவருகிறது. ஆனால் அவர் கொல்லப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நாடு முழுவதும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்பது உலகமறிந்த விஷயம். மகாத்மா காந்தி மத நல்லிணக்கத்தோடு இந்தியாவில் அனைவரும் வாழ வேண்டுமென வலியுறுத்தியபோது அதனை எதிர்த்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். ஆர்.எஸ்.எஸ் உடைய கொள்கையால் தான் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார்" என தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் பா.ஜ.கவும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகிறது. பா.ஜ.க தலைவர் சுதேஷ் வர்மா கூறியதாவது "மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்ற்கும் தொடர்பு உண்டு என்று கூறுவதின் மூலம் 1984ல் நடந்த சீக்கிய படுகொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்பதை ஒப்புகொண்டுள்ளார்" என தெரிவித்தார். சீக்கிய படுகொலை நிகழ்த்தப்பட்ட போது காங்கிரஸ் தலைவர்களின் தலையீடு இருந்தது என்பதை அவ்வளவு எளிதில் மறைத்துவிடமுடியாது. அப்படியானால் இந்த குற்றச்சாட்டிற்கு ராகுல் காந்தி என்ன சொல்லப்போகிறார்?" என கேள்வி எழுப்பினார்.

No comments:
Write comments