Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 12, 2016

மோடி தலைமையில் கூடிய அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டம்


கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

கஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச்சேர்ந்த புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இதுவரை 55 பேர் பலியாகியுள்ளனர். கஷ்மீரில் நிலவி வரும் இந்த அசாதரமான சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கஷ்மீரில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதால் போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை பா.ஜ.க அரசு கூட்டியது. இதில் முன்னாள் பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்னாத் சிங், சுஷ்ம சுவராஜ் உள்ளிட்ட பல பா.ஜ.க தலைவர்களும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல கட்சித்தலைவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic