இந்தியாவில் "ராம ராஜ்யத்தை' (நல்லாட்சியை) அமல்படுத்துமாறு உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என்று அதன் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறினார்.
நாடு முழுவதும் பெரும்பாலான சாலைகளும், நடைபாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வத் தொண்டு அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், அதனைத் தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மனுதாரர், "நாட்டுப் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீங்கள் (நீதிபதிகள்) தள்ளுபடி செய்யக்கூடாது' என்றார்.
அதற்குப் பதிலளித்து தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறியதாவது:
உங்களின் இந்த ஒரு மனுவை அடிப்படையாக வைத்து நாடு முழுவதும் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்பு இருப்பதாக முடிவுக்கு வர முடியாது. நீங்கள் கூறுவதை வைத்து, நாட்டில் அனைத்துமே தவறாக நடப்பதாக எவ்வாறு கருத முடியும்? இந்தப் பிரச்னை தொடர்பாக உயர் நீதிமன்றங்களை நீங்கள் ஏன் அணுகவில்லை? என தாக்குர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த மனுதாரர், "எத்தனை உயர் நீதிமன்றங்களைத்தான் அணுகுவது? இங்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் உச்ச நீதிமன்றம் வந்தேன்; எனவே, எனது மனுவை விசாரிக்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறியதாவது:
நாங்கள் உத்தரவிட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்று நீங்கள் (மனுதாரர்) நினைக்கிறீர்களா? நாட்டில் ஊழல் நடைபெறக்கூடாது என நாங்கள் உத்தரவிட்டால் உடனடியாக ஊழல் ஒழிந்துவிடுமா? அவ்வாறு ஒன்றும் நடைபெறாது. இந்தியாவில் "ராமராஜ்யத்தை' (நல்லாட்சியை) அமல்படுத்துமாறு உத்தரவிட உச்ச நீதிமன்றத்தால் முடியாது. உச்ச நீதிமன்றத்துக்கென சில வரம்புகள் இருக்கின்றன.
அதற்கு கட்டுப்பட்டே எங்களால் உத்தரவிட முடியும் என்றார் டி.எஸ்.தாக்குர். இதையடுத்து, மனுவைத் தள்ளுபடி செய்யும் முடிவை மாற்றிக்கொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

No comments:
Write comments