Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 28, 2016

பி.எம்.டபிள்யு கார் பெற்ற சாதனை வீரர்கள்!


ரியோவில் ஒலிம்பிம் போட்டிகளில் சாதனை படைத்த‌ பிவி சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர் மற்றும் கோபிசந்திற்கு ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார் வழங்கப்பட்டது.

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். சாக்‌ஷி மாலிக் மகளிர் ஃப்ரீஸ்டைல் 58 கிலோ எடைப் பிரிவு வெண்கலப்  பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற திரிபுராவை சேர்ந்த 23 வயதான தீபா கர்மாகர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடம் பிடித்து பதக்கத்தை நழுவ விட்டார்.

இதன்படி ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சரித்திரம் படைத்த பி.வி.சிந்து (பேட்மிண்டன்), சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்), மயிரிழையில் பதக்கத்தை நழுவ விட்ட தீபா கர்மாகருக்கு (ஜிம்னாஸ்டிக்ஸ்) கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தரப்பில் இருந்து பரிசுக்கள் வழங்கப்பட்டது. இப்போது ரியோவில் சரித்திரம் படைத்த பிவி சிந்து, சாக்‌ஷி மாலிக், திபா கர்மாகர் மற்றும் கோபிசந்திற்கு (பேட்மிண்டன் பயிற்சியாளர்) ஐதராபாத் மாவட்ட பேட்மிண்டன் சங்கம்  பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கிஉள்ளது. கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கர் பரிசை வழங்கினார்.

ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் பேட்மிண்டன் அகடாமியில் நடைபெற்ற விழாவில், ரியோ ஒலிம்பிக் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர்  கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கர் நால்வருக்கும் காரின் சாவியை கொடுத்தார். 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic