கஷ்மீரில் நல்லமுறையில் ஆட்சியை நடத்த வாய்ப்பு கொடுங்கள் என அம்மாநில முதல்வர் மெஹ்பூபா முப்தி தெரிவித்துள்ளார்.
கஷ்மீரில் தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கஷ்மீர் முதல்வர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து இப்பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடத்தில் அவர் கூறியதாவது,
"கஷ்மீரில் நடக்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அமைதியை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். கஷ்மீரில் நல்ல முறையில் ஆட்சி செய்ய எனக்கு வாய்ப்பு கொடுங்கள், உங்களுக்கு என் மீது கோபம் இருக்கலாம், அல்லது எனக்கு உங்கள் மீது கோபம் இருக்கலாம். அவற்றையெல்லாம் மறந்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு நாம் திரும்ப வேண்டும். கஷ்மீரில் 95% மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். வெறும் 5% மட்டுமே வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பாகிஸ்தான் அரசே காரணம். அவர்கள்தான் வன்முறைகளை தூண்டிவிட்டு வருகிறார்கள். வன்முறை சம்பவங்களுக்கு ஏழை மக்களின் ஏழ்மை நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். தூண்டிவிட்டு அவர்கள் ஒதுங்கிக்கொள்ள அப்பாவி மக்கள் பலியாகின்றனர்.
காஷ்மீர் மக்களின் நலனுக்காக அமைப்பு ரீதியான ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்கவேண்டும். என்ன விலை கொடுத்தாவது காஷ்மீரில் ரத்தம் சிந்தப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும். காஷ்மீரில் 2008–ம் ஆண்டு மோசமான சூழ்நிலை உருவானது. அதை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கண்டுகொள்ளவில்லை.தற்போது பிரதமர் மோடி காஷ்மீரில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொண்டு வருகிறார். காஷ்மீருக்கு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் குழு இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் வரும்" என்று மெகபூபா கூறினார்.

No comments:
Write comments