சுவாதி கொலை வழக்கு விசாரணை சரியான திசையில் செல்வதாக சிபிசிஐடி போலீஸார் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த சென்னை போலீஸார், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1-ஆம் தேதி கைது செய்தனர்.இந்த நிலையில், சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பலர் விடியோ, புகைப்படம் எடுத்துள்ளனர். பயணிகளை கொலைகாரர்கள் துரத்தியுள்ளனர். இதுதொடர்பாக, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சில பயணிகள் புகார் அளித்துள்ளனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாளில் கைரேகை பதிவாகவில்லை என்றும், அது கர்நாடகத்தில் பயன்படுத்தப்படும் அரிவாள் என்றும் காவல் துறை கூறுகிறது.6 தனிப்படை விசாரித்து, 14 சிம் கார்டுகள் மற்றும் ஒரு மடிக் கணினி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பிலால் சித்திக் என்பவர் மீது சந்தேகம் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அவர் போலீஸ் விசாரணைக்கு 4 நாள்கள் உள்படுத்தப்பட்டார். இவற்றை காவல் துறை மறைத்துள்ளது.உண்மை குற்றவாளிகளைப் பாதுகாக்க சட்டவிரோதமான முறையில் புலன் விசாரணை நடத்துகின்றனர். கொலை தொடர்பான ஆதாரங்களை தமிழக காவல் துறையினர் பெங்களூரில் திரட்டியுள்ளனர்.இந்த வழக்கில் மோசமான புலன் விசாரணை நடக்கிறது.
எனவே, இந்த வழக்கின் விசாரணையை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தினரிடமிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ராம்ராஜ், இந்த கொலை வழக்கில் காவல்துறை சரிவர விசாரணை நடத்தவில்லை. உண்மை குற்றவாளிகளை பாதுகாக்க காவல்துறை முயற்சிக்கிறது.
ஆகையால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றார்.அதையடுத்து போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் எமிலியாஸ், உண்மை குற்றவாளியை காப்பாற்ற முயற்சிப்பதாகக் கூறும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
இது தொடர்பாக பதில் மனுவோ அல்லது அறிக்கையோ தாக்கல் செய்ய விரும்பவில்லை.நீதிமன்றம் கோரினால், சுவாதி கொலை வழக்கில் போலீசார் நடத்திய அனைத்து விசாரணை விவரங்களையும் தாக்கல் செய்கிறோம். தற்போது, இந்த வழக்கு விசாரணை ஒரு தலைபட்சமாக நடைபெறவில்லை.
விசாரணை சரியான திசையில் செல்கிறது என்றார்.இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

No comments:
Write comments