Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 28, 2016

கேப்டன் பிரபாகரனை தலைவர் பிரகாரனாக்கிய தொண்டர்கள்...!




தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் வைக்கும் பேனர்களுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. தங்கள் கட்சி தலைவர்களை தெய்வமாக, குழந்தையாக, உலக புகழ்பெற்ற தலைவர்களாக மார்பிங் செய்து சகட்டுமேனிக்கு பேனர்களை வைத்து வருகின்றனர்.

தங்கள் கட்சியின் தலைவர்களை அவ்வளவு உயர்வாக கருதுகிறார்களாம். ஏம்பா! அதுக்காக சகட்டுமேனிக்கு இப்படி பேனர் வைப்பதா? என பலரும் எரிச்சலுடன் கேட்டு செல்கின்றனர். அந்த வகையில் சென்னையில் தேமுதிக தொண்டர்கள் வைத்த பேனர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை அவர்கள் மார்பிங் செய்தது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரகாரனுடைய போட்டோவைத்தான்.

தேமுதிகவினரின் இச்செயலுக்கு  ஈழத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் கடந்த 25-ந் தேதி கொண்டாடப்பட்டது. சென்னையில் விஜயகாந்துக்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது பீனிக்ஸ் என எழுத்துகள் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டி விஜயகாந்துக்கு அவர்கள் ஊட்டி மகிழ்ந்தனர். அதேபோல் விஜயகாந்தும் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோருக்கு கேக் ஊட்டி நெகிழ்ந்தார்.

இந்த நிலையில் ஆரணி தேமுதிகவினர் வைத்த பேனர் ஒன்று சர்சையாக உலகம் முழுவதும் வெடித்துள்ளது. விஜயகாந்த் பிறந்த நாளுக்காக வைக்கப்பட்ட பேனர் ஒன்றில் விடுதலைப் புலிகள் இயக்க சீருடையில் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இருக்கும் படம் ஒன்றில் பிரபாகரன் முகத்தை நீக்கிவிட்டு விஜயகாந்த் படத்தை மார்பிங் செய்து வைத்திருக்கின்றனர்.

இப்படம் ஊடகங்களில் வெளியான நிலையில் தற்போது ஈழத் தமிழர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். "எங்கள் தேசியத் தலைவர் உருவத்தை சிதைத்திருப்பது அயோக்கியத்தனத்தின் உச்சம்" எனவும் அவர்கள் சாடியுள்ளனர்.

திருட்டு டிவிடி விவகாரத்தில் இயக்குநர் சேரன், ஈழத் தமிழர்களை விமர்சித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த பஞ்சாயத்தே ஓயாத நிலையில் தற்போது தேமுதிகவினரால் விஜயகாந்தும் வம்பில் சிக்கியுள்ளார்.a

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic