சென்னை: ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு போட்டியாக அல்கொய்தா அமைப்பினர் தென்இந்தியா மற்றும் இலங்கையைச்சேர்ந்தவர்களை தங்களுடைய அமைப்பில் சேர்ப்பதற்கு முயற்சித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு இளைஞர்களை மூளை சலவை செய்து தங்கள் அமைப்பில் இணைத்து பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்களுக்கு போட்டியாக அல்-காயிதா அமைப்பும் இதே வேலையில் இறங்கியுள்ளது. இதற்காக தங்களது வீடியோக்கள் மற்றும் அச்சு செய்திகளை தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் மொழிப்பெயர்ப்பதற்காக தனி குழுவை நியமித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அல் காயிதா அமைப்பின் சார்பாக இந்தியகர்களை சேர்க்கும் முயற்ச்சியில் முதன் முறையாக ஈடுபட்டிருக்கிறார்களாம்.
இதற்காக தமிழ் அன்சார், ஓலிவின் சரது போன்ற சமூக வலைத்தள பக்கங்களை பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் அந்த பக்கங்கள் தங்கள் அமைப்பின் செயல்பாடுகளை குறித்த செய்திகளை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பதிவு செய்து இதன் மூல தெனிந்திய மற்றும் இலங்கை இளைஞர்களை கவர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக ‘Syria through Indian Eyes’ என்ற ஃபேஸ்புக் பக்கம் பயன்படுத்தப்பட்டு வருகிறது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் சென்ற தென் இந்திய இளைஞர்கள் அல்காயிதா அமைப்பிலும் சேர்ந்து வருகின்றனர். அங்கு அவர்கள் அவ்வமைப்புகளின் செய்திகளை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் பணிகளுக்கு உதவி வருவதாக உளவுத்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
ஆதாரம்: டெக்கன் குரோனிக்கல்
(27.08.2016)

inthaa aarambichuttangalla.adutha ravusa
ReplyDelete