அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா தனக்கு தொல்லை கொடுக்கும் அதிமுகவினரை கடுமையா எச்சரித்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் வைத்து திமுக எம்.பி திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்ததிலிருந்து ஏழரை நாட்டு சனி சசிகலா புஷ்பாவை தொற்றிக்கொண்டது. அன்று முதல் இன்று வரை சசிகலா புஷ்பா தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள், வழக்குகள் என வருத்தெடுக்கப்பட்டு வருகிறார்.
தன் வீட்டில் வேலை செய்த இரண்டு இளம் பெண்கள் சசிகலா புஷ்பா மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தனர். ஆனால் இதிலிருந்து முன் ஜாமீன் பெற்று தற்காலிகமாக சிறை செல்வதிலிருந்து தப்பித்திருக்கிறார் சசிகலா புஷ்பா. இருந்தாலும் அதிமுகவினர் பல்வேறு வழிமுறைகளில் அவரை மிரட்டி வருவதாக அவர் கூறியுள்ளார்.
அடிமைகளின் கூடாரத்தில் இருக்க தான் விரும்பவில்லை எனவும், தனக்கு தொல்லை கொடுத்தால் தமிழக அரசியலையே புரட்டி போடுவேன் என எச்சரித்துள்ளார். தன்னை ஜெயலலிதா கன்னத்தில் அறைந்தா என்று பகிரங்கமாக சொன்னதற்காகவே தான் பழிவாங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியில் பலரும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களுக்கு எதையும் பகிரங்கமாக சொல்வதற்கு பயம், ஆனால் தான் அப்படி இருக்கப்போவதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தனக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு ஜெயலலிதாதான் முழு பொறுப்பு என்றும் கூறியிருக்கிறார்.
அதிமுகவை பொறுத்தவரை பெண்களின் குரல் தான் ஓங்கி ஒளிக்கும் என்பதற்கு சசிகலா புஷ்பாவும் ஓர் எடுத்துக்காட்டு. என்ன தான் குற்றமிழைத்திருந்தாலும் அவரின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும். சசிகலா புஷ்பா எவ்வாறு இதனை எதிர் கொள்ளப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:
Write comments