இலங்கையில் இருக்கும் சில தமிழ் தேசியவாதிகள் இன்னமும் வேலுப்பிள்ளை பிராபகரன் உயிரோடு இருப்பதாகவும், அவரை காணாமற்போனவர்கள் பட்டியலில் இணைக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கவுன்சிலின் உறுப்பினர் எம். சிவாலிங்கம் எஃப்.எம் வானொலியில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது "வேலு பிள்ளை பிராபகரனை இலங்கை இராணுவத்தினர் கொல்லவில்லை. அவர் கொல்லப்பட்டார் என்கிற பொய்யான புகைப்படத்தை வெளியிட்டு ஏமாற்றி வருகிறார்கள். பிரபாகரனின் சகோதரியோ, சகோதரனோ விருப்பப்பட்டால் பிரபாகரனின் பெயரை காணாமற்போனவர்களில் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வேன். இதற்கான நான் எப்பொழுதும் தயாராக இருக்கிறேன்" என தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்ற உள் நாட்டுப்போரின் போது கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி முல்லைத்தீவு மாவட்டம் அருகே முல்லிவாய்க்காலில் வைத்து பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்தது.
பிராபகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படத்தில் தலையின் ஒரு பகுதி முற்றிலுமாக சிதைந்து போயிருந்தது. பிராபகரன் கொல்லப்பட்டதை அடுத்து உள் நாட்டுப்போர் முடிவுக்கு வந்ததாகவும் மீதமுள்ள விடுதலை புலிகள் இலங்கை அரசிடம் சரணடைந்துவிட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்தது.
இருந்த போதிலும் இலங்கை அரசின் இந்த கூற்று தங்களுக்கு சந்தேகமாக இருப்பதாக தமிழ் தேசியவாதிகள் அன்று முதலே தெரிவித்து வருகின்றனர். மேலும் பிராபகரன் உயிரோடுதான் இருக்கிறார் என அவர்கள் நம்பி வருகின்றனர்.
ஐ. நா மன்றத்தின் ஆணைப்படி ஓ.எம்.பி என்கிற கவுன்சிலை இலங்கை அரசு நிர்மாணித்து, போரின் போது காணாமற்போனவர்களை கண்டுபிடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காணாமற்போனவர்களின் முழு விபரங்கள் அடங்கிய பட்டியல் இந்த குழுவிடம் இருக்கிறது. இந்த பட்டியலில் வேலுபிள்ளை பிராபகரனின் பெயரை இணைக்க வேண்டுமென்பதற்காகவே சிவாலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற உள் நாட்டுப்போரின் போது காணாமற்போனவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரம் ஆகும் என சர்வதேச ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments