சுற்றுலாவிற்காகவும் இன்ன பிற காரணத்திற்காகவும் இந்தியா வரும் வெளிநாட்டு பெண்கள் குட்டை பாவாடை அணியக் கூடாது என மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான 1363 என்ற உதவி எண் சேவையை அறிமுகம் செய்து வைத்த பிறகு மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது அவர்களுக்கு வைக்கப்படும் வரவேற்பு பதாகைகளிலேயே எவற்றை எல்லாம் செய்யலாம், எவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்ற கட்டுப்பாட்டை குறிப்பிட வேண்டும்.
குறிப்பாக அவர்கள் சிறிய நகரங்களுக்கு வந்தால், இரவில் தனியாக வெளியில் சுற்றி திரியக் கூடாது, ஸ்கர்ட் போன்ற குட்டை பாவாடைகளை அணியக் கூடாது. அவர்கள் செல்லும் வாகனத்தின் நம்பர் பலகையையும் போட்டோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். அந்த நம்பர் பலகை போட்டோவை தங்கள் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பி வைக்கவும் சொல்ல வேண்டும். நமது நாட்டிற்கு வருபவர்களுக்கு ஏன் ஆடை கட்டுப்பாடு விதிக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments