Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 28, 2016

கன்டமாகிப்போன கடைசி பந்து!


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது 'டுவென்டி-20' போட்டியில் கடைசி பந்தில் தோனி அவுட்டாக, இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. லோகேஷ் ராகுல் சதம் வீணானது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடர் அமெரிக்காவில் நடக்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி, புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சார்லஸ் (79) நல்ல துவக்கம் தந்தார். மறுமுனையில் அசத்திய லீவிஸ், 48வது பந்தில் 'டுவென்டி-20' அரங்கில் முதல் சதம் கடந்தார். ரசல் 22 ரன் எடுத்தார். பின் லீவிஸ் (100) அவுட்டாக, கேப்டன் பிராத்வைட் 14, போலார்டு 22 ரன் எடுத்தனர். சிம்மன்ஸ் 'டக்' அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்தது. டுவைன் பிராவோ (1), சாமுவேல்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

ரோகித் நம்பிக்கை: கடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ரகானே (7), கோஹ்லி (16) ஏமாற்றினர். பின் ரோகித் சர்மாவுடன் இணைந்த லோகேஷ் ராகுல் வேகமாக ரன்கள் சேர்க்க, இந்திய அணியின் ஸ்கோர் 8.3 வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. ரோகித் சர்மா (62) தனது 11வது அரைசதம் எட்டினார். அபாரமாக ஆடிய லோகேஷ் ராகுல், சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் தனது முதல் சதம் எட்டினார். அதிர்ச்சித் தோல்வி: பிராவோ வீசிய கடைசி ஓவரில், இந்திய அணியின் வெற்றிக்கு 8 ரன் மட்டுமே தேவைப்பட்டன. முதல் பந்தில் தப்பிப்பிழைத்த தோனி 1 ரன் எடுத்தார். அடுத்த 3 பந்தில் 3 ரன் மட்டும் எடுக்கப்பட்டன.

5வது பந்தில் தோனி 2 ரன் எடுக்க, 'டென்ஷன்' எகிறியது. கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில், தோனி தேவையில்லாமல் (43) அவுட்டாக, 20 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் எடுத்து, 1 ரன்னில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. ராகுல் (110) அவுட்டாகாமல் இருந்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic