Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 23, 2016

தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாரான மாயாவதி!


உத்திரபிரதேசத்தில் அடுத்து வருடம் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தற்போதே தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி துவங்கிவிட்டார்.

தலித்கள் மற்றும் சிறுபான்மையினரின் பலம் கொண்ட கட்சியாக திகழ்ந்து வரும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கடந்த முறை ஆட்சியை இழந்தது. தற்போது ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் முனைப்புடன் படு தீவிரமாக செயல்பட்டுவருகிறார். தலித்களுக்கு எதிராக சமீபகாலமாக நடந்து வரும் பிரச்சனைகளையும், தாக்குதல்களையும் தனக்கு சாதகமாக்கிக்கொள்ள மாயாவதி கடுமையாக முயற்சித்துவருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் ஆக்ராவில் பா.ஜ.க சார்பில் 40,000 தலித்களை ஒன்று கூட்ட முயற்சித்து தோல்வியடைந்ததால் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு திரும்பிச்சென்றார் அமித்ஷா. தற்போது அதே அக்ராவில் பல்லாயிரக்கணக்கான தலித் மக்களை திரட்டி தம்முடைய பலத்தை நிரூபிப்பதற்கான வேலைகளை மாயாவதி செய்து வருகிறார். ஆக்ராவின் கோதி மீனா பஜார் அருகே சமாஜ்வாதி கட்சி சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. 2017 தேர்தலை மையமாக வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆளும் பா.ஜ.க அரசை கடுமையாக சாடினார். 2014ஆம் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளை அனைத்தையும் காற்றி பறக்கவிட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், அப்படி அதிக பிள்ளைகளை பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு யார் உணவளிப்பார்கள்? என கேள்வி எழுப்பினார். 



No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic