Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 9, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றிலிருந்து 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல்...!!!


ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (செப்.9) முதல் தொடர்ந்து இரு மாதங்களுக்கு 144 தடை உத்தரவினை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

பரமக்குடியில் இம்மாதம் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் அக்டோபர் 28,29,30 ஆகிய தேதிகளில் தேவர் குருபூஜை ஆகியன நடைபெறுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்நிகழ்ச்சிகளுக்கு வாகனங்களில் வந்தவர்களால் ஏற்பட்ட சில அசம்பாவித சம்பவங்கள், வன்முறைச் சம்பவங்கள் ஆகியனவும் நடந்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும்,பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் பாதுகாக்கவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 9 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடர்ந்து இரு மாதங்களுக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் இம்மாதம் 15 ஆம் தேதி வரையிலும் வெளி மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்களில் வருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இது தவிர இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை நிகழ்ச்சிகளின் போது நினைவிடத்துக்கு உள்பட்ட ஒரு கி.மீ. பகுதியில் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் ஜோதி எடுத்து வர அனுமதிக்கப்படும். மற்ற இடங்களிலிருநது ஜோதி எடுத்து வர தடை விதிக்கப்படுகிறது.

ராமநாதபுரம மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதோ, அனுமதியில்லாமல் பேரணிகள், ஊர்வலங்கள் போன்ற எந்த நிகழ்ச்சிகளையும் நடத்துவதோ கூடாது. மாவட்ட நிர்வாகத்தின முன் அனுமதியுடன் கூட்டங்கள் போன்றவற்றை நடத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic