அஸ்ஸாமில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே நடைபெற்ற சண்டையில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது ஒரு இராணுவ வீரர் காயம் அடைந்தார். இறந்த தீவிரவாதிகள் உடல்கள் அருகே இருந்த பயங்கர ஆயுதங்களை போலீசார் மீட்டார்கள்.
அஸ்ஸாம் மாநிலம் கர்பி அங்கலாங் மாவட்டத்தில் கர்பி மக்கள் விடுதலை புலி தீவிரவாரிகளுக்கும்( கே.பி.எல்.டி) பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று நடந்த துப்பாக்கிச்சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் காயம் அடைந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருந்த இடத்தில் இருந்து ஒரு எஸ்.எல்.ஆர் ரைபிள், ஒன் இன்சாஸ் ரைபிள், 2 பிஸ்டல் துப்பாக்கிகள், இரு கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடம் கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசாரும், இராணுவத்தினரும் கூட்டாக சோதனை நடத்தினார்கள் போகஜன் காவல் நிலைய பகுதியில் நேற்று அதிகாலை ஒரு மணிக்கு இந்த தேடுதல் வேட்டை நடந்த போது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. தாக்குதல் நடவடிக்கையில் காயம் அடைந்த இராணுவ வீரர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.கே.பி.எல்.டி தீவிரவாத அமைப்பு கடந்த 2010-11ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்த தீவிரவாத அமைப்பு கர்பி தேசிய விடுதலை முன்னணி (கே.எல்.என்.எப்.) தீவிரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்து உருவானது.
கே.எல்.என்.எப். அமைப்பு போர் நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து கே.பி.எல்.டி. தீவிரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த தீவிரவாத இயக்கம் போகஜன் பகுதியின் பின் தங்கிய இடங்களில் வேகமாக உள்ளது.

No comments:
Write comments