Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 24, 2016

ரஜினிகாந்தை தமிழர் என அறிவிக்ககோரி போராட்டம் நடத்த முடிவு!

Super Star Rajnikanth originally from tamil nadu

நடிகர் ரஜினிகாந்த்தின் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டம். எனவே அவரை தமிழகத்தைச் சேர்ந்தவர், தமிழர் என்று அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக சட்ட ரீதியாக போராடப் போவதாக கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராமநாதன் என்பவர் திடீரென அறிவித்துள்ளார்.

வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை ஆவணங்களை ஆராய்ந்து பார்த்தபோது ரஜினியின் பூர்வீகம் கிருஷ்ணகிரிதான் என்று தெரிய வந்துள்ளதாகவும் ராமநாதன் கூறுகிறார். எனவே அவரை தமிழகத்தைச் சேர்ந்தவர், தமிழர் என்று அறிவிக்கக் கோரி சட்ட ரீதியாக போராட்டம் நடத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.

எல்லாம் சரி, காவிரிப் பிரச்சினை எழுந்துள்ள நிலையில் இந்தக் கோரிக்கை ஏன் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ள தகவல்கள்:

ரஜினிகாந்த் பூர்விகம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி அடுத்துள்ள நாச்சிகுப்பம் ஆகும்., ரஜினிகாந்த்தின் தந்தை ரானேஜிராவ் மற்றும் அவரது தாயார் ராம்பாய் நாச்சிகுப்பம் வருவாய் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

பிழைப்பு தேடி பெங்களூரு சென்றவர்கள் ரஜினிகாந்த்தின் பெற்றோர்கள். அவர்களுக்கு நினைவகம் வைத்து நாச்சிகுப்பம் கிராமத்திற்கு பல சேவைகள் செய்து வருகின்றனர். ரஜினிகாந்த் பெற்றோர்களின் நினைவகம் ராகவேந்திர அறக்கட்டளை மூலம் பராமாரிக்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளையின் தலைவராக ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்தயநாராயணராவ் இருந்து வருகின்றார்.

இந்தியாவில் மொழிவாரி மாகானங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பே தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி சார்பதிவாளர் எல்லைக்கு உட்பட்டு நாச்சிகுப்பம் வருவாய் கிராமத்தில் ரஜினிகாந்த்தின் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் அசையா சொத்துக்கள் இன்றும் வேப்பனப்பள்ளியில் உள்ளது.

லட்சக்கணக்கான தமிழகர்கள் கர்நாடகத்தில் வாழ்ந்து வந்தாலும் அங்கேயே பிறக்கும் குழந்தைகளை கூட கர்நாடகாவினர் கன்னடர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. தமிழன் என்று அடிக்கின்றனர் அது போன்ற நிலையில் தான் நமது தமிழ் மண்ணிற்கு சொந்தமான ரஜினிகாந்த்தின் முன்னோர்கள் கர்நாடகா சென்று வாழ்ந்து வந்துள்ளனர். எனவே ரஜினிகாத்தை தமிழனாக அறிவிக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளேன்.

நன்றி: ஒன் இந்தியா

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic