Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 5, 2016

முகமது அலியின் ஆட்டத்தை கண்டுகளித்த சென்னை ரசிகர்கள்



மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி ஜனவரி 17ல் தனது 73வது அகவையில் காலெடி எடுத்துவைத்தார். ப சரியாக 35 வருடங்களுக்கு முன்பு 1980 களில் சென்னை வாசிகளுக்கு இந்த குத்துச்சண்டை ஜாம்பவானின் ஆட்டத்தை நேரில் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது இன்று இருக்கும் இளைய சமுதாயத்திற்கு தெரிந்திருக்க வாய்பில்லை.

1980ல் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் மற்றும் அப்பீஜேவுன் இணைந்து நடத்திய மாபெரும் குத்துச் சண்டை போட்டிக்கு சென்னை ஜவர்ஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்  முகமது அலி பங்கேற்று ஜிம்மி எல்லிசை எதிர்கொண்டார். அன்றைய காலத்தில் டிக்கட் விலை ரூபாய் 100, 70, 50, 20 மற்றும் 10 என விற்கப்பட்டது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிலிருந்து மும்பை வந்து, பின்னர் அங்கிருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு தன்னுடைய குடும்பத்தோடு வந்து இறங்கினார் முகமது அலி. அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த முகமது அலி செய்தியாளர்களிடம் கூறும்போது "எனக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்திருந்ததை பார்க்கும்போது எல்லையில்லா மகிழ்சி அடைகிறேன். இந்த குறைந்த நாள் பிரயாணத்தில் எனக்கு இத்தனை நல்ல உள்ளங்களில் கிடைத்த வரவேற்பையும் ஆதரவையும் என் வாழ் நாள் முழுவதும் நான் மறக்க மாட்டேன்." என்று கூறினார்.

முகமது அலி தங்குவதற்காக கண்ணிமரா ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் வரை வழி நெடுகிலும் முகமது அலியை வரவேற்க லட்சக்கணக்கானவர்கள் நின்று வாழ்த்து தெரிவித்தனர். உங்கள் உடலில் பலஹீனம் ஏற்பட்டுவிட்டதே, நீங்கள் இந்த போட்டியில் வெற்றி பெருவீர்களா? என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு தான் விளையாடிய 49 போட்டிகளில் 32 போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டேன்.  நான அவ்வளவாக எதிரி வீரரிடம் இருந்து காயம் அடைந்ததில்லை, எனது முகத்தில் பயம் எதுவும் தெரிகிறதா பாருங்கள். அதனால் தான் நான் குத்துச்சண்டையில் சிறந்து வீரனாக இருக்கிறேன்" என பதில் அளித்தார்.

அன்று நடந்த போட்டியில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழகத்தைச்சார்ந்த பல குத்துச்சண்டை வீரர்களும் முகமது அலியை சந்திப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic