ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் 3 நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இவர் இன்று இரவு அதிபர் ஸ்ரீசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளார். நாளை மறுதினம் யாழ்பாணம் சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இந்நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் வருகையையொட்டி சிங்கள அமைப்புகள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் கொழும்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பான் கி மூன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு சுமார் 50 பேர் திரண்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை விவகாரங்களில் பான் கி மூன் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் ஐ.நா. அலுவலகத்தில் பான் கி மூனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் அளித்தனர்.
இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments