Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 17, 2016

காவேரிக்கு கலாம் கூறிய தீர்வு..!


காவிரி பிரச்சினையால் கர்நாடகமும், தமிழகமும் கொந்தளித்துக் கிடக்கிறது. இரு மாநிலத்திலும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்லாண்டுகளாக நீடித்து வரும் காவிரி பிரச்சினையை தீர்ப்பதை விட்டு விட்டு, அதை வைத்து அரசியல் செய்யும் நிலையே இரு மாநிலத்திலும் தொடர்கிறது.

இந் நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லியுள்ளார். இது குறித்து அவரது ஆலோசகராக இருந்த பொன்ராஜ் கூறுகிறார் இப்படி…

இந்த பிரச்சினைக்கான தீர்வைப் பற்றி டாக்டர் அப்துல் கலாம், தமிழக, கர்நாடக, ஆந்திர, கேரளா அரசுகளிடம் விவாதித்திருக்கிறார். அவர்களது சட்டமன்றங்களிலும் விவாதித்திருக்கிறார்.

அவரது ஆலோசனையின்பேரில், பேராசிரியர் ஏ.சி.காமராஜுடன் இணைந்து நான்கு மாநிலங்களுக்கான தென்னக நீர்வழிச்சாலை திட்டத்தை வடிவமைத்தோம்.

அதன்படி, கடல்மட்டத்தில் இருந்து பொதுவாக 250 மீட்டர் உயரத்தில் நான்கு மாநில அணைகளையும் மழைப்பிடிப்பு பகுதிகளையும் இணைத்து, நீர் வழிச்சாலைகளை உருவாக்கினால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ,50 ஆயிரம் கோடி வரை செலவாகும் என திட்ட அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறோம்.

இந்த ஆய்வு அறிக்கை குறித்து, பிரதமர் மோடிக்கும் நான்கு மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். தென்னக நீர்வழிச்சாலை வந்தால் இந்த நான்கு மாநிலத்திலும் வெள்ளத்தால் கடலில் கலக்கும் 3000 டி.எம்.சி தண்ணீரை, எவ்வித பிரச்சினையில்லாமல் பகிர்ந்து கொள்ளலாம்.

அந்த அந்த மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட அணைக்கட்டுகளில் தேக்கிக் கொள்ளும் நீரை தவிர்த்து, இந்த வெள்ளநீரை பகிர்ந்து கொள்ளலாம். அதையும் மீறி 10 முதல் 20 சதவீதம் மட்டுமே கடலில் கலக்கும். இது ஒன்றுதான் பிரச்னைக்குத் தீர்வைத் தரும். இதற்கான சாத்தியக் கூறுகளை நான்கு மாநில முதல்வர்களும் ஆராய வேண்டும்.

இதை நடைமுறைப்படுத்தத் தொடங்கினால், ஐந்து முதல் 7 ஆண்டுகளுக்குள் தென்னக நீர்வழிச்சாலை பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic