வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது தொடர் வன்முறை தாக்குதல்கள், கொலைகள் நடந்துவருவதை தொடர்ந்து தங்களின் பாதுகாபிற்காக இந்தியா தலையிட வேண்டும் என வங்கதேச இந்துக்கள் தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகின்றனர். சமீப நாட்களாக இந்துக்கள் மீது கொலை வெறித்தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெளிநாட்டினர், கல்வியாளர்கள், கட்டுரையாளர்கள் என சிறுபான்மை சமூகத்தைச்சேர்ந்தவர்கள் மீது வன்கொடுமை நடந்தேறிவருகிறது. இந்து சாமியார்கள் என பலரும் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
இத்தகையை குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தங்களை அல்கொய்தா அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் ஐ.எஸ் அமைப்பின் செயல்பாடுகள் தங்கள் நாட்டில் இல்லை என வங்கதேச அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனினும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடந்து வருவதாகவும் விரைவிலேயே குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டனை வழங்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் பிரமர் ஷேக் அஸீனா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என அந்நாட்டு இந்துக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்திய அரசு வங்கதேச அரசோடு பேசி எங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி தரவேண்டும். நரேந்திர மோடி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர் இதை செய்வார் என்று நம்புகிறோம் என வங்கதேச இந்துக்கள் உரிமை ஆர்வலர் ராணா தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments