Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 17, 2016

நடிகை வித்யா பாலனுக்கு டெங்கு காய்ச்சல்..!



அமெரிக்காவிலிருந்து கஹானி 2 படப்பிடிப்புக்காக சமீபத்தில் மும்பைக்குத் திரும்பிய பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென அமெரிக்காவிலிருந்த திரும்பிய வித்யா பாலனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வித்யா பாலன், 10 நாட்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இதை தொடர்ந்து, மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் வித்யா பாலன் வீட்டில் ஆய்வு செய்தார்கள். அப்போது டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் கொசுவின் லார்வாக்கள் அதே ஃபிளாட்டில் வசிக்கும் ஷாகித் கபூரின் வீட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. பிறகு அந்த லார்வாக்கள் அழிக்கப்பட்டு, மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷாகித் கபூர் உள்ளிட்ட இருவருக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic