Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 9, 2016

ஆம் ஆத்மிக்கு தொடர் சரிவு: வழக்குகளும் பின்னடைவும்!

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மூத்தத் தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் வரும் டிசம்பர் 12ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறியது, பொது ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்துக்காக இவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பெருநகர மாஜிஸ்ட்ரேட் ஹார்விந்தர் சிங், மேற்கண்ட உத்தரவை பிறப்பித்ததோடு, பணியினைக் காரணம் காட்டி டிசம்பர் 12ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜராக தவறக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். அதே தேதியில் ஆம் ஆத்மி தலைவர்களான ராக்கி பிர்லா, சோம்நாத் பாரதி மற்றும் அசுதோஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர். கெஜ்ரிவாலும் மற்ற தலைவர்களும் புது டெல்லி ரயில் பவனுக்கு முன்னால் தர்ணா போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். இதனால் இவர்கள் மீது 144 தடை உத்தரவை மீறியதாகவும், பொது ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்த வழக்கு விசாரணையில்தான் தற்போது நீதிமன்றம் ஆஜராக இவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது மட்டுமின்றி அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமையிலான டெல்லி அரசுக்கு மேலும் பல சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நாடாளுமன்றத்துக்கு 21 செயலாளர்களை நியமித்து டெல்லி அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் 21 செயலாளர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தை எதிர்த்து டெல்லி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், துணைநிலை ஆளுநருக்கே கூடுதல் அதிகாரம் என தீர்ப்பு கூறப்பட்டது. இந்த சறுக்கலில் இருந்து டெல்லி அரசு மீண்டு வருவதற்குள், ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினர். இதனால் பலவிதங்களிலும் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பெரும் பின்னடைவைக் கண்டது.

இவற்றுடன் குஜராத் செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்துக்கு வந்த டெல்லி முதல்வரை எதிர்த்து பாஜக மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பூ, வளையல் போன்றவற்றை கெஜ்ரிவாலுக்கு பரிசளிக்கவும் முயன்ற அவர்கள், கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். டெல்லியில் மட்டுமின்றி குஜராத்திலும் கெஜ்ரிவாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic